யார் புத்திசாலி? எது புத்திசாலித்தனம்?


ஒருவர் புத்திசாலி என்று சொல்லப்பட்டால், அவரைப் பற்றி உங்கள் சிந்தனை எப்படி இருக்கும்?

பெரும்பாலும் படித்த, அறிவுள்ள ஒருவர் உங்கள் கண்முன்னால் வருவார்.

ஆனால் புத்திசாலித்தனம் என்பது ஒரு கேள்விக்கு சரியான விடை சொல்வது, பாடசாலையில் சிறந்த புள்ளிகளைப் பெறுவதும் அல்ல. புத்திசாலி மனிதர்கள் எப்பொழுதும் ஆக்கபூர்வமானவர்களாக, கருனையாலர்களாக, நன்றியுள்ளவர்களாக மற்றும் அடக்கமுள்ளவர்காளாக இருப்பார்கள்.

அவர்கள் தாங்கள் சிறந்த விடயங்களை செய்யும் ஆற்றலுள்ளவர்கள் என்பதை அறிந்தவர்கள். நிச்சயமாக பின்வரும் விடயங்களைச் செய்யமாட்டார்கள்.

1. தமது கடந்த கால தவறுகள் நிகழ்கால வாழ்வில் தலையிடுவதை அனுமதிக்கமாட்டார்கள்.
சில தவறுகளும், தோல்விகளும் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை என்பதை புத்திசாலி மனிதர்கள் அறிவார்கள்.

2. எதிர்மறையான விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள். கற்பனைத் திறனையும், ஆக்கத் திறனையும், வியப்புணர்ச்சியையும், அன்பையும் பயன்படுத்தும் போது வாழ்க்கை சிறப்படையும் என்பதை புத்திசாலி மனிதர்கள் அறிவார்கள்.

3. அவர்கள் பிரச்சனைகளை விட்டும் விரண்டோடமாட்டர்கள். அனைவருக்கும் பிரச்சினைகள் இருந்தன, இருக்கின்றன மேலும் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வரும். தொழிலும், பணத்திலும், குடும்பத்திலும் ஆரோக்கியத்திலும் பிரச்சினைகள் இருக்கின்றன. புத்திசாலி மனிதர்கள் இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். அவர்கள் இபிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறந்த முறைகளை தேடுவார்கள். அவர்கள் விழும்போது எழுந்து பயணத்தை தொடர்வார்கள். பயத்தை எதிர்கொள்ளும் தைரியம் அவர்களிடம் இருக்கிறது. மேலும் பிரச்சினைகள் முன்னேற்றத்தின் படிக்கற்கள் என்றே அவர்கள் கருதுகிறார்கள்.

4. ஏனைய மனிதர்கள் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஏனைய மனிதர்களின் எதிர்மறைக் கருத்துக்கள்  வெற்றியும் சந்தோசமும் நிறைந்த வாழ்க்கை வாழ்வதை விட்டும் அவர்களைத் தடுப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.
5. அவர்கள் நேரத்தை வீண்விரயம் செய்யமாட்டார்கள்.

6. அவர்கள் உடனடி தீர்வுகளை எதிர்பார்ப்பதில்லை.

7. அவர்களால் கட்டுப்படுத்த முடியாத விடயங்களில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

8. தங்களை அதைரியப்படுத்துபவர்களுடன் நேரத்தை விரயம் செய்யமாட்டார்கள்.

9. அவர்கள் கர்வம்கொள்ளமாட்டர்கள்.

10. அவர்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்.