கல்வியாளர் Educatorஉலகத்தில் ஒரே நேரத்தில் பல வகிபாகங்களை வகிப்பவர்கள் கல்வியாளர்கள் மாத்திரமே! கல்வியாளர்களுக்கு நிகராக எந்தத் தொழிலும், பணியும் சேவையும் இல்லை. தலைவர், முகாமையாளர், திட்டமிடுபவர், கற்றலுக்கு வசதி செய்து கொடுப்பவர், வழிகாட்டி, ஆலோசகர் என்று பல பொறுப்புக்களை சுமந்து அறிவும், திறமைகளும் பண்பாடுமுள்ள ஒரு சமூகத்தை உருவாக்கும் உயர் பணியைச் செய்பவர்களே கல்வியாளர்கள். 

இப்படி பன்முக ஆற்றல்கொண்ட கல்வியாளர்கள் தான்  நபிமார்களின் வாரிசுகள் என்ற அந்தஸ்த்தை அடைய மிகப் பொருத்தமானவர்கள்.

கல்வியாளர்கள் தான் சமூகத்துக்கு வழிகாட்ட மிகவும் தகுதியுடைவர்கள். அவர்களின் வழிநடத்தலின் கீழ் தான் எமது இளம் சமுதாயம் வளர்க்கப்படுகின்றது. 

ஒரு வைத்தியர், சத்திர சிகிச்சை நிபுணர் தவறு செய்தால் ஒரு நோயாளி தான் பாதிக்கப்படுவார், ஒரு கல்வியாளர் தவறினால் ஒரு சமூகம் பாதிக்கப்படும்.

எனவே ஆசிரியர்களை தமது குழந்தைகளை பரீட்சைக்குத் தயார்படுத்தும் வெறும் போதகர்கலாகப் (instructors) பார்க்கும் சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு சமூகத்தை அறிவூட்டுவதோடு ஆசிரியர்கள் தம்மை கல்வியாளர்களாக வழிகாட்டிகளாக, நபிமார்களின் வாரிசுகளாக வளர்த்துக்கொள்வதட்கு அவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

இந்த இலட்சியப் பணியை முன்னெடுப்பதே எமது நிறவனத்தின் உயர் இலக்கு.